இன்றைக்கு கணினி உலகம் தான். மறுப்பதற்கில்லை. ஆனால், நித்தமும் கலெக்டர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு, தாசில்தார் ஆபீஸ் என நம் கண்களை சுழற்றிப் பாருங்கள். எத்தனை எத்தனை எளிய மனிதர்கள் மனு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஒரு பணக்காரர் செய்ய முடியாததை ஒரு மனு மூலம் ஒரு பாமரர் செய்து விட முடிகிறது. அதுதான் மனுவுக்கான தனித்தன்மை.
****
இந்தப் புத்தகத்தில் நூற்றுக்கணக்கான மாதிரி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. போகிற போக்கில் ‘எங்கள் தெருவில் லைட் எரியவில்லை’ ‘சாலை சரியில்லை’ என்றெல்லாம் மிக மிக சாதாரணமான மனுக்களாக இல்லாமல் அத்தனையையும் மதிப்பு மிகுந்ததாக தேர்ந்தெடுத்து அளிக்கப்பட்டுள்ளது.
****
யூடிஆர் சம்பந்தப்பட்ட புகார் மனுக்கள், காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள், அரசு தரும் உதவிகள் வேண்டி தரப்படும் கோரிக்கை மனுக்கள், பத்திரப்பதிவுத் துறையில் அளிக்கப்படும் புகார் மனுக்கள், இலவச சட்ட சேவை மையத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள், இலஞ்ச ஒழிப்புத்துறையில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் இப்படி முதலமைச்சர் தனிப்பிரிவு முதல் விஏஓ வரை தர வேண்டிய மனுக்களின் மாதிரிகள் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
****
அத்தோடு நில்லாமல், பனை மரம் வெட்ட அனுமதி வேண்டி கலெக்டரிடம் தரப்படும் மனு, பழைய செட்டில்மெண்ட் வேண்டி மனு, வழிப்பாதைக்கு உரிய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் விதமாக மனு, பழைய புலப்படம், பழைய மறு நில அளவைப் பதிவேடு, பழைய செட்டில்மெண்ட் பதிவேடு வேண்டி மனு என மனுக்களை எழுதும் முறையையும் யாருக்கு எழுத வேண்டும் என்கிற முறையையும் சொல்லும் விதம் உபயோகமாக இருக்கிறது.
****
பட்டாவில் உள்ள பெயர் பிழையாக வந்துள்ளதை திருத்தம் செய்யக் கோரி விண்ணப்பம், பெற்றோரை கவனிக்காத பிள்ளைக்கு எழுதி வைத்த செட்டில்மெண்டை இரத்து செய்யக்கோரி புகார் விண்ணப்பம், வழக்கை சரியாக கையாளாத வழக்கறிஞர் மேல் புகார் மனு, பள்ளிச் சான்று காணாமல் போனால் செய்ய வேண்டியவை, வறிய நிலைச் சான்று, கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்த திருடனைப் பற்றியான புகார் மனு, இருசக்கர வாகனம் தொலைந்து போனது பற்றி புகார் மனு!
என ஏராளமான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
நன்றி
Model Petitions – Book No :85
₹200.00
Price Summary
- ₹300.00
- ₹200.00
- 33%
- ₹200.00
- Overall you save ₹100.00 (33%) on this product
மனுக்கள் எழுதும் முறை – மாதிரி மனுக்கள் (விலை ரூ.200/-)
(புகார் மனுக்கள், கோரிக்கை மனுக்கள், அரசு உதவிக் கோரும் மனுக்கள், தகவல் மனுக்கள்)
புத்தக விலை – ரூ.200/-
****
இன்றைக்கு கணினி உலகம் தான். மறுப்பதற்கில்லை. ஆனால், நித்தமும் கலெக்டர் அலுவலகம், முதலமைச்சர் தனிப்பிரிவு, தாசில்தார் ஆபீஸ் என நம் கண்களை சுழற்றிப் பாருங்கள். எத்தனை எத்தனை எளிய மனிதர்கள் மனு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். ஒரு பணக்காரர் செய்ய முடியாததை ஒரு மனு மூலம் ஒரு பாமரர் செய்து விட முடிகிறது. அதுதான் மனுவுக்கான தனித்தன்மை.