தொழிலாளர் சட்டம் : Labour Law (Tamil)
₹500.00 ₹750.00
Price Summary
- ₹750.00
- ₹500.00
- 33%
- ₹500.00
- Overall you save ₹250.00 (33%) on this product
தொழிலாளர் நலச் சட்டங்கள் பற்றி முன்னாள் பேராசிரியர் நல்லதம்பி எழுதியுள்ள நூல் இது. Labour Laws in Tamil.
இந்த நூல், தொழிலாளர்களின் நலனுக்காக இந்திய அரசு இயற்றிய பல்வேறு சட்டங்களை விளக்குகிறது.
இந்த நூலின் பயன்கள்:
தொழிலாளர் அலுவலர் தேர்வு, சட்டக்கல்வி தேர்வுகளுக்கு பயன்படும்.
தொழிலாளர்கள், முதலாளிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், பணியாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பயன்படும்.
தொழிலாளர் சட்டத்தை விளக்கும் விதமாக எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின் நலனைக் காப்பதற்காக இந்திய அரசு இயற்றிய சில சட்டங்கள்:
இந்தியத் தொழில் பழகுநர் சட்டம் – 1961
இந்தியத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் – 1952
மைக்கா மைன்ஸ் தொழிலாளர் நல நிதிச் சட்டம், 1946
பீடித் தொழிலாளர்கள் நல வரிச் சட்டம், 1976
சினிமா தொழிலாளர்கள் நல (செஸ்) சட்டம், 1981
Related Products
புதிய முக்கிய சட்டங்கள் மூன்று : BNS, BNSS, BSA
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம்.. மூன்று சட்டங்களும் இப்போது மாறிவிட்டன.
பல காலமாக இருந்தச் சட்டங்கள் இன்று முழுமையாக மாறி இருப்பதாலேயே மக்களிடையே இந்தப் புத்தகத்தின் தேவை அதிகம் இருப்பதை காண முடிகிறது.
ஆங்கிலம் மற்றும் தமிழில் இரு மொழிகளில் வெளியிட்டிருப்பது மிகச் சிறப்பு. அத்துடன் கெட்டி அட்டை பைண்டிங், பாதுகாக்க ஏதுவாக உள்ளது.
முன்பெல்லாம் ஒருவர் ஏமாற்றினால் 420 ( Four Twenty) என்பார்கள். ஆனால், இனி அப்படி ஏமாற்றுபவர்களை 318 என்று வேண்டுமானால் அழைக்கலாம். ஏனெனில், ஏமாற்றுதல் பிரிவு 318க்கு சென்று விட்டது.
இப்படி எண்ணற்ற விஷயங்களை முன்பு எப்படி இருந்தது? இப்போது எந்தப் பிரிவு எதற்கு வருகிறது என தெளிவாக விளக்குகிறது இந்த நூல்.
ஒவ்வொரு சட்டப்பிரிவையும் அழகான தமிழில், புரியும் மொழி நடையில் ஆங்கிலத்தில் இத்துடன் எடுத்துக் காட்டுகள் என அடுக்கிக் கொண்டே போகிறது இந்தப் புத்தகம்.
கிட்டத்திட்ட 1300 பக்கங்களை ஒன்றிணைத்து, அனைத்து மக்களும் எளிதாக படிக்கும் வகையில் கெட்டி அட்டையுடன், மூன்று சட்டங்களையும் தந்துள்ளது சிறப்பு..
மாதிரி ஆவணங்கள் Model Deeds (தமிழ் & English)
ஒரு சொத்து ஆவணத்தின் முக்கியத்துவம் பற்றி தனியாக வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமில்லை . இன்றைக்கு மக்களுக்கு அதன் அவசியம் நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனாலும், சின்ன சின்ன பிழைகள் எங்கேயோ போய் நிறுத்தி விடுகின்றன. அப்போது எப்படி ஜாக்கிரதையாக பத்திரம் எழுத வேண்டும்? எவ்வாறு அதைச் சரிப்பார்க்க வேண்டும் என முப்பது ஆவணங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்துள்ளது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒவ்வொரு விதிமுறைகள் உள்ளன. பவர் பத்திரமும் விற்பனை பத்திரமும் ஒன்றல்ல,. தான செட்டில்மெண்டும், தானப் பத்திரமும் ஒன்றல்ல. உயில் என்பதும் பாகப்பிரிவினையும் ஒன்றல்ல. ஒவ்வொன்றுக்கும் ஒரு மாறுபட்ட பார்வை இருக்கிறது… சட்டம் இருக்கிறது… கட்டணம் இருக்கிறது.
தம் வாரிசுகளுக்கு ஒருவர் தன்னுடைய சொத்துகளை செட்டில்மெண்ட் செய்கிறார். அப்படி வாரிசுகளுக்கு சொத்துகளை தரும் போது, எந்த விதமான பிரதிபலனையும் அவர் பெறுவதில்லை. அதனால் தான் அதற்கு தான செட்டில்மெண்ட் என்று பெயர். அதாவது, தானமாக தரும் செட்டில்மெண்ட். இதற்கு கட்டணமாக குடும்ப உறுப்பினர் எனில், முத்திரைத்தாள் கட்டணமாக சொத்து மதிப்பின் படி ஒரு சதவீதம் அல்லது ஷெட்யூல் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.40,000/- வாங்கப்படுகிறது.
பதிவுக் கட்டணமாக சொத்து மதிப்பின் படி ஒரு சதவீதம் அல்லது ஷெட்யூல் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.10,000/- வாங்கப்படுகிறது.
Model Deeds
மாதிரி-ஆவணங்கள்
(35 ஆவணங்கள் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது)
சட்ட நுணுக்கங்கள், புதிய கட்டண விவரங்கள், பல்வேறான சட்ட குறிப்புகள் 2025 நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது)
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006. The Food Safety and Standards Act and Rules. – தமிழ்/English
‘தர்பூசணியில் கலப்படம் இருக்கு.. அது என்னய்யா ஆப்பிள் பழத்துல மெழுகு தடவி கிடக்கு.. மாம்பழத்தை கல் போட்டு பழுக்க வச்சிருக்காங்க..’’
‘‘ஏப்பா இது என்ன ஹோட்டல் கடை சுத்த பத்தம் இல்லாமல் இருக்கு.. அது என்ன குடிச்ச டீ டம்ளரை ஒரே தண்ணியிலேயே கழுவுற..பரிமாறுகிற ஆட்கள் ஏன் தலையில கேப் இல்லாமல் இருக்காங்க.. உணவுல முடி விழுகாதா. வடை சுடுற எண்ணெய் அசுத்தமா இருக்கு. வாடிக்கையாளர் போகும் கழிப்பிடம் கேவலமாக இருக்கு. ஹோட்டலுக்குள்ள எலி ஓடுது’’
‘‘ ஏப்பா.. இப்ப மான் மார்க் பொயலை மட்டும் இல்லை.. தலைப்பொயலையும் போதைப் பொருள் லிஸ்டுல வந்துடுச்சு. பொடிக் கூட போதைப் பொருள் தான்யா.. ஏப்பா கடைக்காரரே பாக்கெட்டை காட்டு. ஹான்ஸ், பான்பராக் விற்குறியா.. கூல் லிப்பை எங்க மறைச்சு வச்சருக்க..?’’
நிற்க..
இன்றைக்கு ஹீரோ என்றால், அவர்கள் உணவு பாதுகாப்புத் துறையினர் தான். சும்மா வளைச்சு வளைச்சு மக்களை பாதுகாக்க என்னமா உழைக்கிறாங்க.
போலீஸ்காரங்க கூட பத்தடி தான் பாயுவாங்க போலிருக்கு.. இவங்க சும்மா பதினாறு அடி பாயுறாங்க.
சமூக வளைத் தளங்களின் தாக்கத்தால் இவர்கள் செய்யும் அலப்பறைகளால் அதகளப் படுகிறது சமூகம்.
திடீரென கடைக்குள் நுழைவது. ஒருமையில் பேசுவது. மிரட்டுவது. அபராதம் விதிப்பது. வழக்கு போடுவது என எக்கச்சக்க சிக்கலில் வியாபாரிகள் இருப்பது உண்மை.
போலீஸ் என்றால் அவர்களுக்கு சீருடை இருக்கும். பொதுமக்களால் அடையாளம் காண இயலும்.
இவர்களுக்கு சீருடையும் இல்லை. அதனால் யார் வருகிறார்கள். யார் மிரட்டுகிறார்கள். யார் உண்மையான அதிகாரிகள்? யார் போலிகள் என ஒன்றுமே புரியவில்லை.
உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உண்மையில் என்ன அதிகாரம் இருக்கிறது? அவர்கள் எவ்வளவு அபராதம் விதிக்க இயலும்? எப்படி வழக்கு தொடுக்க இயலும்? ஒரு வியாபாரி முதல் முறை தவறு செய்தால் எவ்வளவு அபராதம்? இரண்டாம் முறை அதே தவறை செய்தால் என்ன அபராதம்? மூன்றாம் முறை தொடர்ந்து செய்தால் என்ன அபராதம்? கடைக்குள் அத்துமீறி உணவு பாதுகாப்புத் துறையினர் நுழையலாமா?
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இலஞ்சம் வாங்கினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? பான்மசாலா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு எத்தனை நாட்கள் சீல் வைப்பார்கள்.. என்ன நடவடிக்கைக்கு அது மேலும் போகும்..
இப்படி எண்ணற்ற தகவலை ஒரு வியாபாரி மட்டுமல்ல.. சாதாரண பொதுமக்களும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்றைய நிலைக்கு உள்ளது. கல் போட்ட பழங்களை விற்கக் கூடாது. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. யாருக்கும் இருக்கவும் முடியாது. ஆனால், இந்த தவறு செய்த வியாபாரியை அதிகாரி எவ்வாறு அணுக வேண்டும் என்கிற ஒரு முறை இருக்கிறது அல்லவா? அது என்ன முறை.. இதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உணவு பாதுகாப்புத் துறையின் அதிகாரங்கள், தரக் குறைவுக்கான தண்டனைகள், கலப்படப் பொருளுக்கான தண்டனைகள், பாதுகாப்பற்ற உணவுக்கான தண்டனைகள், பொய்த் தகவலுக்கான தண்டனைகள், தீர்ப்புகள், மேல் முறையீடுகள் இப்படி எக்கச்சக்க விளக்கங்களை இந்த நூல் தருகிறது. ஒவ்வொரு வியாபாரிகள் மட்டுமல்ல அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்..
கிராம ஊராட்சிகளில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்பது எப்படி? Book No – 83
இன்றைக்கு அதிகம் பொதுமக்களால் கேள்விக்கு உள்ளாவது கிராம ஊராட்சிகள் தான் என்றால், அது மிகையல்ல. ஒவ்வொரு கிராம ஊராட்சி சம்பந்தப்பட்டும் மக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேள்விகள் கேட்டபடியே உள்ளனர். இது ஒருவித அடுத்தக் கட்ட நகர்வு என்றாலும், எங்கே, எப்படி, எவ்வாறு, யாரை கேள்வி கேட்க வேண்டும் என்பதில் கொஞ்சம் திணறவே செய்கிறார்கள்.
கிராம ஊராட்சியில் இருக்கும் ஒருவர், அரசாங்கத்தின் நிதியுதவியோ அல்லது திட்டங்களோ தனக்கு மட்டும் வந்து சேரவில்லை என்று கருதுகிறார். யாரோ அதிகாரம் பெற்ற ஒருவரின் காழ்ப்புணர்ச்சியால் வரவில்லை என்று கருதுகிறார். அப்போது, எவ்வாறு அந்த ஆவணங்களைக் கேட்டுப் பெற்று, எவ்வாறு அணுகுவது என்கிற பார்வையே மிகப் பெரிய அறிவை அனுபவத்தைக் கொடுக்கும்.
இதை இந்தப் புத்தகம் ஒரு பாதிக்கப்பட்டவரின் பார்வையிலிருந்தும் பேசுகிறது.
அதே வேளையில், ஊராட்சியில் வரும் நல உதவிகள், திட்டங்கள், வரவுகள், செலவீனங்கள் என்னென்ன என்கிற பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணும் ஒரு கிராம ஊராட்சியின் பொது ஜனமாகவும் நின்று தெரிந்து கொள்ள கைக் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.
நம் எண்ணத்தில் வருபவையையெல்லாம் எழுத்தாக்கி, தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேள்விகள் கேட்டால் அது கேள்விகள் கேட்டவருக்கு வரும் சிக்கல்களையும் இப்புத்தகம் பேசாமல் இல்லை.
ஒரு உதாரணமாக, 2020 முதல் நாளது தேதி வரை உள்ள வரவு செலவுப் பதிவேடுகளை தருக.. என ஒன்றைக் கேள்விக்கு, விடை நான்காயிரம் பக்கமாக இருக்கலாம். அதற்கு கட்டணம் ரூ.8000/& செலுத்தி நாம் பெற்றுக் கொள்ளும் சூழ்நிலை நிலவலாம். அதனால் மனம் போன போக்கில் கேள்விகள் இருக்கக் கூடாது என தெளிவுரை தருகிறது இந்தப் புத்தகம்.
கிராம ஊராட்சியில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கேள்வி கேட்க ஏதுவாக நிறைய மாடல்கள் தரப்பட்டுள்ளது. கட்டண விவரங்கள், குறிப்புகள், சட்ட நுணுக்கங்கள் என அடுக்கிக் கொண்டே போகிறது.
கிராம ஊராட்சியில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனக்கான அடுத்தக் கட்டத்தை அடையவதாக இருக்கட்டும், கிராம ஊராட்சிகளின் ஒவ்வொரு நகர்வையும் தெரிந்து கொள்வதாகட்டும் இந்தப் புத்தகம் பெரிதும் உதவி செய்யும் எனில் அது மிகையல்ல.
எளிய மக்களின் பார்வையில் நின்று, எளிய தமிழில் பேசும் நல்ல புத்தகம்.