இதுவே தானமாக அதாவது கிஃப்டாக ஒருவருக்கு தந்தால் ஏழு சதவீதம் மற்றும் இரண்டு சதவீதம் என ஒன்பது சதவீதம் ஆகிறது.
பார்த்தீர்களா? தானம் என்பதற்கும் தானசெட்டில்மெண்ட் என்பதற்குமே எத்தனை வித்தியாசங்கள் உள்ளது என.
இதுவே தானத்தை அரசுக்கு, கோவிலுக்கு என தரும்போது எந்த கட்டணமும் பதிவுத்துறை வசூல் செய்யாது.. அது வேறு கதை!
கிரையப்பத்திரம், உயில், பாகப்பிரிவினை, பவர் பத்திரம், தத்து பத்திரம், கட்டுமான ஒப்பந்தம், கிரைய ஒப்பந்தம், பிழைத்திருத்தல் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம், குத்தகைப் பத்திரம், வாடகை பத்திரம், விடுதலை, பரிவர்த்தவனை, அடமானம், ட்ரஸ்ட், Family Settlement, Partenership Deed, போகியம், பாதைக்கான வழியுரிமை ஆவணம், நீதிமன்ற வழக்குக்காக சிறப்பு அதிகாரம் வழங்கும் பத்திரம் என பல்வேறான பத்திரங்கள் தமிழில் தரப்பட்டுள்ளன. அதே வேளையில் ஆங்கிலத்திலும் தந்துள்ளது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
செக்குப்பந்தி என்று சொல்லக்கூடிய நான்குமால்கள் என்று சொல்லக் கூடிய சொத்தின் அருகில் இருக்கும் நான்கு எல்லைகளை சரியாக குறிக்க வேண்டும். இல்லாவிடில் அதுவே பலப்பிரச்சனைகளை உண்டு செய்யும் என மாடல் பத்திரங்களைப் பார்த்தாலே புரிகிறது.-
ஷெட்யூல் எவ்வாறு போட வேண்டும். நிபந்தனைகளை எவ்வாறு எழுத வேண்டும். கிரைய ஒப்பந்தமோ, வீட்டு வாடகை ஒப்பந்தமே, ட்ரஸ்ட் பத்திரமோ எதற்குமே ஒரு வடிவம் (Formet)
உண்டு. ஒரு சட்டப்பார்வை உண்டு. அது பிசகும் போது, நாளைக்கு எவ்வகைப் பிரச்சனைகளும் வரலாம் என்பது நாம் அறிந்தே!
‘‘மனுஷன் பேச்சை நம்பறதா இருந்தா.. எதுக்கு பத்திரம் இருக்கோனும்..அப்புறம் பத்திரப் பதிவு ஆபிசு இருக்கோனும்! நாங்க ஆறு மணிக்கு மேல யாரையும் நம்பறதில்லைங்க.. அதனால பத்திரத்துல எழுதி பதிவு பண்ணினாதான் நம்ப முடியும்!’’ என அமைதிப்படை படத்தில் மணிவண்ணன் சத்யராஜ் வசனம் வருமே. அது தான் நினைவுக்கு வருகிறது.
பங்கு பிரிக்கிற போது வழியுரிமையை எழுதாமல் விட்ட எத்தனையோ பேர் அவஸ்தையில் உள்ளதை நாம் பார்க்கிறோம்.
சர்வே எண்ணை உட்பிரிவு எண்ணை மாற்றி எழுதியதைப் பார்க்கிறோம். இப்படி எத்தனையோ சின்ன சின்ன தவறுகள் நடந்து விடுகிறது.
இதெல்லாமல் வராமல் இருக்கவும், அதேவேளையில் பத்திரம் எழுதுவதும் ஒரு கலை தான். அதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியம் என்கிற அளவில் இந்தப் புத்தகம் மக்களுக்கு மிகப் பெரிய பயனைக் கொடுக்கும்.
நன்றி!